0 item(s) - ₹0.00
Your shopping cart is empty!
.
மாவுச்சத்தை சுத்தமாக நிறுத்திவிட்டால் என்ன நடக்கும்?

மாவுச்சத்தை சுத்தமாக நிறுத்திவிட்டால் என்ன நடக்கும்?

Write By: admin Published In: ROOT Created Date: 2013-12-25 Hits: 285 Comment: 1

இதை அறிய நாம் டைம் ட்ரேவல் செய்து சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் பின்னோக்கி போக வேண்டும்

ஆண்டு 1876.எனது வயது ஒத்தவர்களின் தாத்தாவின் தாத்தா (முப்பாட்டனார்) அந்த ஆண்டு தான் பிறந்திருக்க வேண்டும்.

(நான் < அப்பா < தாத்தா < பாட்டனார் < முப்பாட்டனார்)அந்த ஆண்டின் சிறப்பு என்ன தெரியுமா?

இதை அறிய நாம் டைம் ட்ரேவல் செய்து சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் பின்னோக்கி போக வேண்டும்

ஆண்டு 1876

எனது வயது ஒத்தவர்களின் தாத்தாவின் தாத்தா (முப்பாட்டனார்) அந்த ஆண்டு தான் பிறந்திருக்க வேண்டும்.

(நான் < அப்பா < தாத்தா < பாட்டனார் < முப்பாட்டனார்)

அந்த ஆண்டின் சிறப்பு என்ன தெரியுமா?

நமது இந்திய துணைகண்டம் கண்ட மிகப்பெரிய உணவுப்பஞ்சம் ஏற்பட்டது அந்த ஆண்டில் தான். சுமார் மூன்று வருடங்கள் நீடித்த கொடிய உணவுப்பஞ்சம்.

காரணங்கள் பலவாறு கூறப்படுகின்றன

பருவ மழை பொய்த்தது ஒரு காரணம்,
அளவுக்கு அதிகமான தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது மற்றொரு காரணம், ஆங்கிலேயர்களின் சுயநல ஆட்சி வேறொரு காரணம் என்று கூறப்பட்டாலும்

இந்தியா முழுமைக்கும் சேர்த்து 
55 லட்சம் பேர் இறந்தனர் என்று ஆங்கிலேயர் பதிவு செய்துள்ளனர்.

இந்த பஞ்சம் ஆரம்பித்தது நமது தமழ்நாட்டில் தான். பின்பு மெதுவாக இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. இந்த பஞ்சத்தை the great famine of madras
1876-78 என்று குறிப்பிடுகின்றனர்.

(https://en.m.wikipedia.org/…/Great_Famine_of_1876%E2%80%9378

 
)

ஆக, அந்த பஞ்சத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் தான் நமது முப்பாட்டன் பாட்டிமார்கள் என்பதில் பெருமை கொள்வோம்.

உணவு இன்றி எப்படி அவர்கள் அந்த மூன்று வருடங்களை கடந்திருக்க முடியும்???

உணவு இல்லாமல் அவர்களது உடல் எவ்வாறு உயிர் பிழைத்தது???

நமது உடலில் மாவுச்சத்தை உணவில் பிரதானமாக எடுத்துக்கொள்வதால்.. நமது ரத்தத்தில் க்ளூகோஸ் கலந்திருக்கும்

நமக்கு அடுத்த வேலை உணவு கிடைக்கவில்லையெனில் இந்த க்ளூகோஸ் நமக்கு நான்கில் இருந்து ஆறு மணிநேரம் எரிபொருள் தேவையை சமாளிக்கும்.

உங்களுக்கு அடுத்த வேலை உணவு கிடைக்கவில்லையெனில்..

நமது கல்லீரலிலும் தசைகளிலும் சேர்த்து வைக்கப்பட்டுள்ள க்ளைகோஜென்(glycogen) க்ளூகோசாக மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப்படும். இது glycogen-o-lysis எனப்படும். (Lysis என்றால் உடைதல்)

இந்த க்ளைகோஜென் நமது எரிபொருள் தேவைகளை மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் வரை சமாளிக்கும் .

ஐந்து நாட்களாகியும் ஒருவருக்கு உணவு கிடைக்கவில்லையெனில் 
அடுத்து உடல் தான் சேர்த்து வைத்த கொழுப்பை கரைக்க ஆரம்பிக்கும்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோ கலோரிகள் அளவு ஆற்றலைத் தரும் அளவுக்கு கொழுப்பு நம்மிடம் ஸ்டாக் இருக்கும். ஆகவே இந்த கொழுப்பை வைத்து நூறு நாட்கள் கூட உயிர் பிழைக்க முடியும்.

ஆகவே நமது முன்னோர்களுக்கு உயிர் தந்தது அவர்கள் சேர்த்து வைத்திருந்த கொழுப்பு தான்.

மாவுச்சத்து கிடைக்காத நாட்களில் நம் உடல் நாம் சேர்த்து வைத்த கொழுப்பைக் கொண்டு மட்டுமே உயிர் வாழ முடியும்.

கொழுப்பும் இல்லையெனில் நமது உடலில் உள்ள புரதம் காலியாகும் வரை உயிர் வாழ முடியும்.

புரத இழப்பை நாம் muscle wasting என்கிறோம் .

பஞ்ச காலத்தில் கொழுப்புணவோ மாவுச்சத்தோ புரதமோ எதுவுமே கிடைத்திருக்காது.

அதன் விளைவாகத்தான் மிகவும் ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருப்பவர்களை "பஞ்சத்துல அடிபட்டவன் மாதிரி இருக்கான்" என்கிறோம்.

ஆகவே, மாவுச்சத்தையும் க்ளூகோசையும் மட்டுமே நம்பி நமது உடல் படைக்கப்படவில்லை என்பது திண்ணம்.

கார்போஹைட்ரேட் என்பது ஊக்க மருந்து போலத் தான் .சிறிதளவு இருந்தால் பிரச்சனையில்லை 
அதையே சர்வகாலமும் எடுத்தால் நம்மை அது அதற்கு அடிமையாக்கிவிடும்.

எப்படி மாவுச்சத்தை எரித்தால் க்ளூகோஸ் வருகிறதோ 
அதே போல கொழுப்பை எரித்தால் கிடைப்பது ஃபேட்டி ஆசிட்டும் கீடோன்களும்

இந்த "கீடோன்கள்" தான் நம் முன்னோர்களை பஞ்சத்தில் இருந்தும் காப்பாற்றிய தேவதைகள். 
-------------------------
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

Specials